ஒரு கிராமத்து தமிழ் ஆசிரியரின் உருக்கமான பதிவு..
ஒரு கிராமத்து தமிழ் ஆசிரியரின் உருக்கமான பதிவு.. வாய்ப்புகள் அமைவதில்லை என்பதை விட.. வாய்ப்புகளை அறிவதில்லை என்பது தான் பொருத்தம். எப்படியாவது அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம்... சரி என்று குடும்பத்தினரிடம் காசை வாங்கி வகுப்பிற்கு சேர்ந்துவிட்டேன்..!! நான் படித்தது தமிழ் என்றாலும்.. ஒரு வெறி இருந்தது.. எப்படியாவது படித்து பணிக்கு செல்ல வேண்டும் என்று.. டி.என்.பி.சி. வகுப்பு என்றால் நான் 1 முதல் 10 வரை படித்த தமிழ், அறிவியல், வரலாறு பாடத்தை தான் மறுபடியும் படிக்க வேண்டுமாம்.. அனைத்து கேள்வியும் அதில் இருந்து தான் கேட்பார்களாம்..!! உடனே ஒரு கேள்வி... எதுக்கு Ph.D படித்தேன் என்றே தெரியவில்லையே.. பத்தாம் வகுப்பு முடிந்ததும் இந்த தேர்வை எழுதியிருந்தால் வேலைக்கு போய் இருக்கலாம்.. இப்போது கணக்கு புத்தகத்தை புரட்டினால், மண்டையில் ஏறவில்லை.. சரி என்று வங்கி பணி வகுப்பிற்கு சென்றால்.. அங்கும் இதே பிரச்சினை தான்.. நாம் படித்தது ஒன்று.. ஆனால் இப்போது படிப்பது எல்லாம் skill test சம்பந்தமாய் இருக்கிறது.. நமக்கு ஓரளவு skill test வரும் என்றாலும்... ஆங்கி...