Posts

Showing posts from February, 2020

கருத்தரங்கில் கண்டதும் கேட்டதும்.

Image
கருத்தரங்கில் கண்டதும் கேட்டதும். தமிழ் இலக்கியங்களில் பண்பாடு குறித்த பதிவுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 25.01.2020 அன்று திண்டுக்கல் ஜி.டி.என் கலைக்கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பாக நடைபெற்றது. இதில் பங்கு பெற்று தமிழறிவு பருகும் வாய்ப்பினைப் பெற்றேன்.                                                     கருத்தரங்கு முகப்பு           இக்கருத்தரங்கில் இலங்கை மலேசியா கனடா போன்ற நாடுகளிலிருந்து தமிழ் அறிஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர் .    சிறப்புரை வழங்கிய மலேசியா பன்னாட்டுத் தமிழ் கல்வியாளர் பேரவையின் செயலாளர் குணநாதன் ஆறுமுகம் அவர்கள் தொடக்க காலத்தில் மலேசியாவின் கட்டமைப்பில் தமிழர்களின் பங்கு முக்கியமானது. தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த தமிழர்தான் கொடிகட்டிப் பறந்தனர். பின் வருகை புரிந்த சீனர்களின் ஆதிக்கம் மலேசியாவில் அதிகரித்தது. இதன் காரணமாக தமிழர்களின் வாழ்வில் சிறு...