ஆல் பாஸ் எனும் ஆபத்து
ஆல் பாஸ் எனும் ஆபத்து உலகம் தன்னை உணர்ந்து கொண்டிருக்கும் நேரம். கொரோனா பாதிப்பால் உலகமே தட்டுத்தடுமாறி இயங்கிக் கொண்டு இருக்கின்றது. உலகப் பொருளாதாரமும் முடங்கி மெல்ல மெல்ல இப்பொழுதுதான் துளிர்விட துவங்கி இருக்கின்றது. மக்களும் பயத்தில் மூழ்கி இப்பொழுதுதான் இப்பொழுதுதான் அதிலிருந்து விடுபட துவங்கி இருக்கின்றனர். பல நாடுகளில் கொரானாவின் பாதிப்பு குறையாமல் இருக்கும் நிலையில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் சமூகத்தின் பலநிலைகளில் இருந்து வரும் மாணவர்கள் ஒன்று கூடும் இடம் என்பதால் கொரோனா பரப்பும் மையமாக இருந்து விடக்கூடாது என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் பொது முடக்கம் நீடிக்கின்றது. அதனால் மாணவர்கள் பல மாதங்களாக வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மாணவர்களுக்கு...