Posts

Showing posts from 2020

ஆல் பாஸ் எனும் ஆபத்து

Image
  ஆல் பாஸ் எனும் ஆபத்து                உலகம் தன்னை உணர்ந்து கொண்டிருக்கும் நேரம்.  கொரோனா  பாதிப்பால் உலகமே தட்டுத்தடுமாறி இயங்கிக் கொண்டு இருக்கின்றது. உலகப் பொருளாதாரமும் முடங்கி மெல்ல மெல்ல இப்பொழுதுதான் துளிர்விட துவங்கி இருக்கின்றது. மக்களும் பயத்தில் மூழ்கி இப்பொழுதுதான் இப்பொழுதுதான் அதிலிருந்து விடுபட துவங்கி இருக்கின்றனர்.                            பல நாடுகளில் கொரானாவின் பாதிப்பு குறையாமல் இருக்கும் நிலையில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் சமூகத்தின் பலநிலைகளில்  இருந்து வரும் மாணவர்கள் ஒன்று கூடும் இடம் என்பதால் கொரோனா  பரப்பும் மையமாக இருந்து விடக்கூடாது என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் பொது  முடக்கம் நீடிக்கின்றது. அதனால் மாணவர்கள் பல மாதங்களாக வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இதன்காரணமாக மாணவர்களுக்கு...

சிலப்பதிகாரம் – அடைக்கலக் காதை

                                                              சிலப்பதிகாரம் – அடைக்கலக் காதை கருணை மறவன் கோவலன் http://silapathikaram.com/blog/?p=5721 தொலையாத செல்வம் உடையவன் கோவலன் http://silapathikaram.com/blog/?p=5770 ஏழைகளின் தலைவன் கோவலன் http://silapathikaram.com/blog/?p=5782 மாதரி கவுத்தியடிகளை வணகுதல் http://silapathikaram.com/blog/?p=5770 கண்ணகியை அடைக்கலமாக தருதல் . http://silapathikaram.com/blog/?p=5836 கண்ணகியை கவுதியடிகளிடம் போற்றிக் கூறுதல் http://silapathikaram.com/blog/?p=5883

கருத்தரங்கில் கண்டதும் கேட்டதும்.

Image
கருத்தரங்கில் கண்டதும் கேட்டதும். தமிழ் இலக்கியங்களில் பண்பாடு குறித்த பதிவுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 25.01.2020 அன்று திண்டுக்கல் ஜி.டி.என் கலைக்கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பாக நடைபெற்றது. இதில் பங்கு பெற்று தமிழறிவு பருகும் வாய்ப்பினைப் பெற்றேன்.                                                     கருத்தரங்கு முகப்பு           இக்கருத்தரங்கில் இலங்கை மலேசியா கனடா போன்ற நாடுகளிலிருந்து தமிழ் அறிஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர் .    சிறப்புரை வழங்கிய மலேசியா பன்னாட்டுத் தமிழ் கல்வியாளர் பேரவையின் செயலாளர் குணநாதன் ஆறுமுகம் அவர்கள் தொடக்க காலத்தில் மலேசியாவின் கட்டமைப்பில் தமிழர்களின் பங்கு முக்கியமானது. தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த தமிழர்தான் கொடிகட்டிப் பறந்தனர். பின் வருகை புரிந்த சீனர்களின் ஆதிக்கம் மலேசியாவில் அதிகரித்தது. இதன் காரணமாக தமிழர்களின் வாழ்வில் சிறு...