ஒரு கிராமத்து தமிழ் ஆசிரியரின் உருக்கமான பதிவு..

வாய்ப்புகள் அமைவதில்லை என்பதை விட..
வாய்ப்புகளை அறிவதில்லை என்பது தான் பொருத்தம்.
எப்படியாவது அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம்...
சரி என்று குடும்பத்தினரிடம் காசை வாங்கி வகுப்பிற்கு சேர்ந்துவிட்டேன்..!!
நான் படித்தது தமிழ் என்றாலும்..
ஒரு வெறி இருந்தது..
எப்படியாவது படித்து பணிக்கு செல்ல வேண்டும் என்று..
டி.என்.பி.சி. வகுப்பு என்றால் நான் 1 முதல் 10 வரை படித்த தமிழ், அறிவியல், வரலாறு பாடத்தை தான் மறுபடியும் படிக்க வேண்டுமாம்.. அனைத்து கேள்வியும் அதில் இருந்து தான் கேட்பார்களாம்..!!
உடனே ஒரு கேள்வி... எதுக்கு Ph.D படித்தேன் என்றே தெரியவில்லையே.. பத்தாம் வகுப்பு முடிந்ததும் இந்த தேர்வை எழுதியிருந்தால் வேலைக்கு போய் இருக்கலாம்.. இப்போது கணக்கு புத்தகத்தை புரட்டினால், மண்டையில் ஏறவில்லை..
சரி என்று வங்கி பணி வகுப்பிற்கு சென்றால்..
அங்கும் இதே பிரச்சினை தான்..
நாம் படித்தது ஒன்று..
ஆனால் இப்போது படிப்பது எல்லாம் skill test சம்பந்தமாய் இருக்கிறது..
நமக்கு ஓரளவு skill test வரும் என்றாலும்...
ஆங்கிலம் சுத்தமாய் வராது...
எங்களுக்கு ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லி தந்த ஆசிரியர்களை விட மனப்பாடம் செய்ய சொல்லி தந்த ஆங்கில ஆசிரியர்கள் தான் அதிகம்..!! எல்லாவற்றையும் எளிதாக படிக்க ஆர்வம் இருந்த எனக்கு அந்த கணக்குப் படிக்க மனம் உடன்படவே இல்லை..!!
இருந்தாலும் தினம் படிப்பேன்..
கொடுமையான காலம் தான் என்பேன்..
ஒரு நாளுக்கு 10 மணி நேரத்தை பணியில் தொலைத்து...
சாப்பாட்டிற்கு 1/2மணி நேரத்தை தொலைத்து..
துணி துவைகக்க, குளிக்க 1 மணி நேரம்..
என்று முடிந்து விடும்...
மீதி உள்ள 6மணி நேரத்தில் ஏதாவது படித்தால் தான் கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிக்க முடியும்..!!
அதற்கு புத்தகத்தை எடுத்து படிக்கும் போது..
பாதியிலே என்னை அறியாமல் தூங்கிவிடுவேன்...!!
எழுந்து பார்த்ததும் என் மீது எனக்கே பரிதாபமாக இருக்கும்..!!
பணிக்கு (தனியார் கல்லூரியில்)சேர்ந்த சமயங்களில் வாரம்23 மணிநேரம் பணிகளுக்கு, 25பணி வரை சென்ற நியாபகம் இருக்கிறது..!!
யாரிடமும் பரிதாபத்தை வாங்குவது எனக்கு பிடிக்காது அதனால் தான் சொல்லவில்லை..!!
"பணிக்கு சென்றுவிட்டு"
எப்போதாவது நேரம் கிடைத்தால் வெளியே இருந்து படிக்க மட்டும் அங்கு செல்வேன்..!!
வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக படிக்க சென்றுவிடலாமா என்று யோசித்தால்...
" திருமணம், வயது 37" என்று பயிற்சி வகுப்பை நிறுத்திவிட்டேன்..!!
இனி நான் நினைத்தாலும் அதற்கான நேரம் கிடைக்காது..!!
ஆனால் இப்படி எல்லாம் தேர்வுகள் இருக்கும்..
அதற்கு எப்படி படிக்க வேண்டும் என்று
கல்லூரி படிக்கும் போதே தெரிந்திருந்தால் என் போன்ற கிராமத்து இளைஞர்கள் தங்களுக்கான வழிகளை தேர்ந்தெடுக்க முடியும்..!!
வாய்ப்புகள் இல்லா உலகம் இது இல்லை..
ஆனால் வாய்ப்புகளை தெரியா இளைஞர்களும் உள்ளனர் இங்கு..!
அது தான் பிரச்சினை..!!
இப்போது படித்த பெற்றோர்கள் எல்லாம் தங்கள் குழந்தைகள் கல்லூரி படிக்கும் போதே... சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல ஆயத்தப்படுத்தி விடுகின்றனர்..!!
ஆனால் இப்படி தான் வேலை கிடைக்கும்..
இது தான் படிக்க வேண்டும் என்று கூட சொல்ல தெரியாத பெற்றோர்களை கொண்ட கிராமத்து இளைஞர்களை அரசாங்கமும்... ஏமாற்றி...
தங்கள் அரசியல் நோக்கத்திற்காக, திறமை இல்லாத ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துவதும்..
ஆங்கில வகுப்புகளை சரிவர நடத்தாமலும்..
இந்தியை எதிர்த்து ஒரு பகுதிக்குள்ளே அடக்குவதும்..
படிப்பிற்கும் வேலைக்கான தேர்வுக்கும் சம்பந்தம் இல்லாமல் ஆக்குவதும் தான் தமிழகத்தின் சாபக்கேடு..!!
கல்வி முறை மாற்றம் வேண்டும்..
போட்டி தேர்வுக்கான முறையும் மாற(TET தேர்வில் அனைத்துப் பாடங்களையும் படிக்க வேண்டும் என்ற நிலை, அப்போதையக் கல்வித்தகுதி BLit with TPT or B.Ed இன்று பி.எட் கட்டாயம்) (BEO தேர்வில் அனைத்து பாடங்களும் பட்டப்படிப்புத்தரத்தில் உள்ளது, என்னைப்போன்ற கலைப்பிரிவு பாடத்தைப் பட்டமாக படித்தவர்களால் இது சாத்தியமா?) வேண்டும்..!!
அவ்வளவு தான்...!!
குறிப்பு::
1) தம்பி உன் இயலாமை தான் தம்பி இந்த பதிவு என்று பலர் சொல்லலாம்..!! ஆனால் இது தான் ஒரு கிராமத்து இளைஞனின் யதார்த்த பதிவு..!!
இவ்வாறு தனது எண்ணக் குமுறலை வெளிபடுத்தியவர் இவர் ஒருவர் தான் என்று நினைத்து விடாதீர்கள். பலர் உள்ளனர் இத் தமிழ் நாட்டில்.
அந்த பலர் வேறு யாரும் இல்லை கிராமப்புற முதல்தலைமுறை தமிழ் பட்டதாரிகள்.

Comments
Post a Comment