தொப்பை வருவதற்குக் காரணம் தெரியுமா..?


அனைவருக்கும் வணக்கம் ..!, 

             நான்  பார்த்தது, கேட்டது  எனது சிந்தனைக்கு  எட்டிய கருத்துகளை  உங்களுடன் பகிர்ந்து  கொள்ளலாம் என்று நினைத்தேன்  அதுதான் இந்த பதிவு. 

        இன்று பள்ளி செல்லும் குழந்தைகள்,   பணிக்குச் செல்பவர்கள், படுத்துத் தூங்குபவர்கள் போன்ற அனைவருக்கும்   உடல்  பருமனும்,  தொப்பையும்  பெரும் தலைவலியாக உள்ளது. இதற்கு காரணம்   அவர் அவர்களே தான். ஆனால் நாம் உண்ணும் உணவுப் பொருள்களைக் குறை கூறுகின்றோம். இவ்வாறு கூறுவதைத் தவறு என சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். காரணம் எந்த ஒரு உணவுப் பொருளையும் நாம் விரும்பி, தேவையான அளவு  உண்ணும் பொழுது அது நமது உடலுக்கு எந்தவிதமான தீங்குகளையும்  ஏற்படுத்தி விடாது. விரும்பாத உணவை உண்ணும் பொழுதுதான் ஒவ்வாமை ஏற்பட்டு உடலுக்குப் புதிய புதிய பாதிப்புகளைத் தருகின்றன.
                                 


     பழங்கால மக்கள் உடல் எடை கூடுவதையும், தொப்பை வைப்பதையும் செல்வந்தர்களுக்கு இருக்கும் குறியீடாகவும், வறுமையினால் பாதிக்காமல் செல்வச் செழிப்பான வாழ்க்கை வாழ்ந்தவர் என்று பெருமையாக நினைப்பார்கள். ஆனால் இன்று உடல் பருமனும் தொப்பையும் அசிங்கத்தின் அடையாளமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. இது  தவறான கண்ணோட்டமாகும். 

              குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் காலை உணவை  நன்றாக மென்று சாப்பிடாமல் வேகமாக அவசர கதியில்  அப்படியே விழுங்கி விடுகின்றார்கள்.  பணிக்குச் செல்பவர்களைச் சொல்லவே வேண்டாம்..!.  அலைபேசியில் பேசிய படியும் , தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகளைப்  பார்த்த படியே  உணவு உண்ணுகின்றனர். சிலரோ  பயணத்தின் போது சாப்பிட்டு நேரத்தைச் சேமிக்கலாம் என்று புத்திசாலித்தனமாக நினைத்து,  பயணத்தில்   அவசரமா உண்ணவை  நன்றாக பற்களால் மென்று உண்ணாமல் அப்படியே விழுங்கி விடுகின்றனர். இதுவே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகின்றன.

          நாம் உண்ணும் உணவைச்  செரிக்க வைப்பதற்கு  ஹைட்ரோ க்ளோரிக் என்ற அமிலம் இயற்கையாகவே அனைவரின்  வயிற்றிலும்  சுரக்கின்றது..  .  நாம்  அவசரமாக உண்ண நினைத்து  அரைகுறையாக மென்றும், மெல்லாமலும் விழுங்கி விடுகின்றோம்.  இயல்பாக நன்றாக மென்று உண்பதற்குக் குறைந்தது 20 நிமிடம்  ஆகும் என்றால்,  நாமோ  உணவு அனைத்தையும்  5 நிமிடத்தில் உண்டு  முடித்துவிட்டுகின்றோம்..  குறிப்பிட்டுச் சொன்னால் ஒரு நேர உணவைமுப்பது முறைகளுக்கு மேல்  கையால் எடுத்து உண்போம்.  அவசரமாக உண்ணும் போது  ஐந்தில் இருந்து எட்டு  முறைகளில்  கையால் உணவை எடுத்து உண்டு முடித்து விடுகின்றோம்.  
    இதனால் தான்  நன்றாக மென்று உண்ணும் உணவு திரவமாக மாற்றம் அடைந்து  ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்துடன் எளிதாக இணைந்து செரிப்பதற்கு  எளிதாகின்றது.
  ஆனால் அரைகுறையாக உண்ணும் உணவோ ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தில் திட பொருளாக விழுந்து  செரிப்பதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளுகின்றது.  அதிக நேரம் அந்த அமிலம்  வயிற்றில் இருந்து உணவுப் பொருளை செரிக்க வைக்க வினைப் புரிவதால்  வயிறு பெருக்கத்திற்கும் உடல் பருமனுக்கும் அதுவே காரணமாக அமைந்து விடுகின்றது.
     நான் இதை முதலில் நம்பவில்லை,  என்னுடன் உண்ணும் சிலரை உணவு உண்ணும் நேரங்களில் உற்று நோக்கிக் கவனிக்கும் பொது   வேகமாக  அரைகுறையாக மென்று உண்பவர்களுக்குத்  தொப்பையும் உடல் பருமனும் இருப்பதையும், உணவை  நன்றாக  மென்று  உண்பவர்கள் தொப்பைக்கான அறிகுறியே இல்லாமல்  இருப்பைதை கண்டு வியந்தேன். இதன் வாயிலாக  பிரச்சனை உண்ணும் உணவில் இல்லை உண்ணும் முறையில் தான் என்பதை உணர்ந்தேன்.
      
          எனவே,  
  1. உணவை உண்பதற்குத் தேவையான கால அளவை ஒதுக்கி  நன்றாக  மென்று  உண்ண  வேண்டும்.
  2. உணவு உண்பதை எந்த காரணத்தைக்கொண்டும்  தவிக்கக் கூடாது. 
  3. உண்ணும் பொது அலைபேசியில், தொலைக்காட்ச்சியில் கவனத்தை முழுவதுமாக வைத்துவிட்டு உண்பது  தவறானது ஆகும்.
                                  நன்றி 
.ப.முத்துப்பாண்டி பரமசிவம்.-




         

Comments

Post a Comment

Popular posts from this blog

சிலப்பதிகாரம் – அடைக்கலக் காதை

பண்டைய இலக்கியம் - பாடக் குறிப்புகள்